திங்கள், 17 ஜனவரி, 2022

நாணயங்களின் விலை உயர்வுக்கு ஒரு முக்கியமான காரணம்.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் விலிருந்து நாணயங்கள் வெளியிடப்பட்ட சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது

இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டால் பெரும் சாம்ராஜ்யம் அமைத்து ஆட்சி செய்த அசோகர் முதல் இன்று வரை உள்ள ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்டுள்ள நாணயங்கள் எண்ணிக்கை மற்றும் வடிவங்களை கற்பனைக்கெட்டாத ஆகும். இதில் சக்கரவர்த்திகள் மன்னர்கள் குறுநில மன்னர்கள் ஜமீன்தார்கள் அனைவரும் அவரவர்கள் எல்லைக்குள் பயன்படுத்துவதற்காக நாணயங்களை வெளியிட்டுள்ளார்கள் .  

இந்த நாணயங்களை அனைத்தையும் சேகரிப்பது என்பது உலகிலுள்ள எந்த வசதி படைத்தவர் ஆளும் இயலாத ஒன்றாகும் .

நாணயங்கள் சேகரிப்பார்கள் தவிர மற்ற பொது மக்களுக்கு தெரியாத ஒரு செய்தி என்னவென்றால் நாணயம் சேகரிப்பாளர்கள் என்று சிறப்பு நாணயங்களை அரசாங்கத்தால் வெளியிடும் நடைமுறை உள்ளது இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்

சென்னையில் மதராஸ் நாணயவியல் சங்கம் பல நாணய கண்காட்சிகளை நடத்தியுள்ளன. கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கு என்று நாணயம் சேகரிப்பாளர்கள் தங்கள் நாணயத்தை சேகரிப்பை போட்டி போட்டு கொண்டு காட்சி படுத்துவார்கள் , இதில் ஆச்சரியம் என்னவென்றால் தான் சேகரிப்பை காட்சிப்படுத்த அந்த சங்கத்திற்கு அவர்கள் பணம் கட்ட வேண்டும் பணம் கட்ட இல்லாதவர்கள் தன் சேகரிப்பை காட்சி படுத்த இயலாது, இவ்வகை நிலையிலும் தன் சேகரிப்பை காட்சிப்படுத்த எடுத்து வந்து உரிய இடம் இல்லாமல் திரும்பி எடுத்துக் சென்ற நிகழ்வும் உண்டு .இன்றைய நிலையில் முற்றிலும் மாறி வியாபார நோக்கத்துடன் மட்டுமே  நாணயவியல்  கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு செய்தி நாணயம் விற்பனை செய்பவர்களுக்கு  வசதி தான் என்றாலும் சேகரிப்பாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. சில இடங்களில் நடத்தப்படும் கண்காட்சியில் சேகரிப்பாளர்கள் காட்சிப்படுத்த சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன அதுவும் ஓரமாக சிறிய அளவிலும் உள்ளது.

 இந்தியாவில் 2012 க்கு பிறகு நாணயம் ஏலம் விடும் நடைமுறை அறிமுகமாகி ஏலம் விடும் நிறுவனங்கள் அதிகமாக தோன்ற ஆரம்பித்தன நிறுவனங்கள் தங்கள் சொந்த சேகரிப்புகளை பெரும்பாலும் எழுத்தில் கொண்டு வர மாட்டார்கள் மாறாக நாணயம் சேகரிப்பாளர்கள் இருந்து நான் பெற்று ஏலத்தில் விற்பனை செய்வார்கள் இம்முறையில் ஏலம் விடும் நிறுவனங்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் உண்டு .சேகரிப்பாளர்கள் இடமிருந்து நாணயங்களைப் பெற்று அவர்களை தரம்பிரித்து புகைப்படம் எடுத்து விலை விவரங்களுடன் அட்டவணைப்படுத்தி ஒரு புத்தகம் தயாரிப்பார்கள் இதற்கு அதிகம் செலவாகும் குறைந்தபட்சம்  ஆயிரம் புத்தகங்கள் ஆகுது தயாரித்து சேகரிப்பாளர்கள்  அனுப்பவேண்டும் . அப்படிப் புத்தகங்கள் பெறுவோர் அனைவரும் நாணயங்கள் வாங்குவார்கள் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. பெரும் முதலீடு செய்து எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறாமல் மன சங்கடத்துக்கு ஆளாகி நஷ்டப்பட்ட வர்களும் உண்டு.

 கொரோனா காலத்தில் முன்புவரை புத்தகங்கள் அனுப்பும் முறை நடைமுறையில் இருந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்  நாணயங்களை ஏலம் விடும் நிறுவனங்கள் சொந்த வலைத்தளங்களை ஏற்படுத்தி அதில் அட்டவணைப்படுத்தி வியாபாரத்தை தொடங்கினார்கள் . வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு மட்டுமே நாணயங்களை  பற்றி செய்திகள் சென்றடைந்தால் சேகரிப்பாளர் எண்ணிக்கை மிகவும் சுருங்கிப்போய் நாணயவியல் ஆராய்ச்சிக்கு பலமே பலவீனமாக போய்விட்டது.

 சமீப காலத்தில்  ஏலம் விடப்படும் நாணயங்களை பற்றி முகநூல் ட்விட்டர் தலங்களில் சிறிய சிறிய செய்திகளாக எழுதி வருகிறார்கள். இதுவும்  அவ்வளவாக வெற்றி பெறவில்லை. 

நான் மேலே குறிப்பிட்டது போல்  இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நாணயங்கள் குறித்து எந்த ஒரு தனிநபர் ஆலும்அடையாளம் காட்ட முடியாது அதனால் ஏலம் நடத்தும் நிறுவனங்களுக்கு நாணயங்களை வகைப்படுத்த அதன் தரம் மற்றும் சிறப்புகளை அறிந்து உள்ள நபர்களை ஒன்றிணைத்து ஒரு குழு அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது இந்த  செலவுகள் மற்றும் ஏலம் நடத்தும் நாளில் ஏற்படும் நடைமுறை செலவுகளும் அனைத்துமே ஏலம் நடத்தும் நிறுவனங்கள் செய்யவேண்டியுள்ளது , இதனால் அட்டவணை செய்யும் காசுகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை அந்த நாணயத்தின்மதிப்புடன் கூட்டினால் தான் வியாபாரம் சற்று லாபம் அடையும். இந்த முறையை தான் எல்லா  ஏலம் விடும் நிறுவனங்களும் பின்பற்றுகிறார்கள்.

இதில் இன்னொரு சங்கடம் என்னவென்றால் வட நாட்டினருக்கு குறிப்பாக மும்பை டெல்லி கொல்கத்தா அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ள  ஏலநிறுவனத்திற்கு  தமிழ்நாட்டில் கிடைக்கும் நாணயங்களின் விலையை பற்றி அதிகம் தெரிவதில்லை அதனால் குறைந்தது ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதன் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். மேலும் சில நிறுவனங்கள் நாணயங்களை விற்பனை செய்பவர்கள் சொல்லும் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அது எப்பொழுதுமே சற்று அதிகமாக தான் உள்ளது. இவ்வகை நடைமுறைகளால் நாணயங்களின் விலை உயர்வதோடு நாணயம் சேகரிப்பாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதுவும் ஒரு வருத்தமான செய்திதான். 

நான் முன்பு சொன்னது போல் எந்த ஒரு தனிநபரும் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து நாணயங்களையும் வகைப்படுத்தவும் விபரங்களை கூறுவோம் இயலாது இதனால் நாணய ஏல  அட்டவணையில் விபரங்கள் எழுதும்போது பல தவறுகள் நிகழ்ந்து விடுகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறி இந்த பதிவை முடிக்க விரும்புகிறேன்.

 சில மாதங்களுக்கு முன் நடத்திய ஏலத்தில் சோழர்கள் காலத்தில் தங்க காசு ஒன்று பட்டியல் இடப்பட்டு இருந்தது அதன் விவரங்களாக முன்பக்கத்தில் புலி அமர்ந்த நிலையில் இரண்டு மீன்கள் ஒரு குடையின் கீழ்  இருப்பது போல உள்ளது அது சோழர் காலத்து நாணயம் என்று முடிவு எடுத்தார்கள் ஆனால் பின் பக்கத்தில் இருக்கும் எழுத்தை தேவநாகரி என்று தவறாகப் படித்து உள்ளார்கள் ஆனால் அது தேவநாகரி எழுத்தில் இல்லை என்றும் அது சோழர் காலத்து தமிழ்  எண்கள், சோழர் ஆட்சி செய்த வருடத்தை குறிப்பிட்டு வெளியிட்ட நாணயம் என்றும் தஞ்சாவூரில் வசிக்கும் நாணயவியல்  ஆராய்ச்சியாளர் திரு சீதாராமன் அவர்களால் கண்டறியப்பட்டு  இவ்விவரங்கள் என்னிடம் கூறினார்.

இதற்கு சான்றாக தமிழில் ஆட்சி ஆண்டுகளைக் குறிக்கும் நாணயங்களை தமிழ் எண்கள் உடன் தவலேஸ்வரம் புதையல்( Dhavleswaram)கிடைத்துள்ளது. இதைப்பற்றி சென்னை அருங்காட்சியகம் ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளது.

 இந்த தவறை எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட அட்டவணையில் இன்றுவரை சரி செய்யப்படவில்லை இவ்வகை தவறுகள்  உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் இது தவறு சரித்திரத்தை தவறாக குறிப்பிடும் நிலையில் உள்ளதால் புதிதாக கிடைக்கும் நாணயங்களை அந்தப்பகுதியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள்யிடம் கருத்தை கேட்டு வெளியிட வேண்டும்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

 இன்று தபால் அலுவலகத்தில் விரைவு தபால் பதிவு செய்யும்  அறிமுகமான பெண் ஊழியர் ஒருவர் உங்கள் மனைவி கூட வரவில்லையா ? என்று கேட்டார் அதற்கு நான்  இன்று வைகுண்ட ஏகாதேசி எனவே மனைவி கோவிலுக்கு சென்று இருக்கிறார் என்று கூறினேன். அதற்கு அந்த ஊழியர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? என்று கேட்டார் , உடனே நான் மனைவிதான் என் தெய்வம் என்று கூறினேன் ,!!!!ஒரு மாதிரியாக என்னை பார்த்தார் .  பிறகு நான் கூறினேன் கொஞ்சம் இன்பமும் நிறைய கஷ்டமும் யாரு தருவார்களா அவர் தானே கடவுள் என்றேன் . என்னை ஒரு முறை முறைத்துவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

சட்டம்

 நூறு வருடங்களுக்கு முன் நம் நாட்டில் உருவாக்கப்பட்ட அல்லது நம் நாட்டில் கிடைக்கும் எந்த ஒரு பொருளும் இந்தியாவை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று சட்டம் சொல்கிறது அப்படி செல்ல வேண்டுமென்றால் தொல்லியல் துறை அனுமதியுடன் அனுப்பலாம் என்று உள்ளது. நமது கலைப் பொருள்கள் எதுவும் வெளிநாடு செல்லாமல் தடுப்பது இந்த சட்டம் உறுதி செய்கிறது .

 இது ஒரு நல்ல சட்டம் தான் ஆனால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்ட நூறு வருடங்களுக்கு முன்னால் உள்ள பொருள்கள் இந்தியாவுக்குள்  வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது

( என்று சட்டம் இருக்கிறது.) இது எந்த வகையில் சரி என்று புரியவில்லை உதாரணத்துக்கு தபால் துறையின் மூலம் நூறு வருடங்களுக்கு முன்னால் உள்ள காசுகளை அனுப்பினாள் அது தபால்துறை (கஸ்டம்ஸ்)   சுங்கத்துறை பிடித்து வைத்துக்கொள்கிறது.. பிறகு அந்த பொருள் என்ன ஆகிறது என்று ஆராய்ந்து பார்த்தார் சுங்கத்துறையினர் அதை ஏலத்துக்கு விடுகிறார்கள் அதன் மதிப்பு அவர்களுக்கு தெரியாது எப்போது ஏலம் நடக்கிறது என்பது தெரியாத, என்ன விலைக்கு ஏலம் விடப்படுகிறது என்பதும் தெரியாது. ஆனால் அந்தப் பொருள் இந்தியாவுக்குள் வந்துவிடும்.

நூறு வருடங்கள் பழமையான பொருள் இந்தியாவுக்குள் வருவதை தடை செய்யும் இந்த சட்டத்தைப் பற்றி உங்கள் கருத்துகளை பகிரவும்.

வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களுக்கு சுங்கத்துறை  சுங்கவரி விதிக்கிறார்கள்.  அப்படி ஒரு வரியை நிர்ணயம் செய்து சட்டத்துக்குள்பட்ட அந்த நூறு வருடங்களுக்கு பழமையான பொருள்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாமா.

 சுங்கத் துறையினரால் பிடித்து வைத்துக் கொண்ட பொருட்களை தொல்லியல் துறைக்கு அதன் மதிப்பை நிர்ணயம் செய்ய அனுப்புகிறார்கள் அந்த மதிப்பை கொண்டு வரி விதிக்கலாம்

இன்றைய நாணயவியல் நிலை

இன்றைய நாணயவியல்  நிலை.
இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது ஒரு தனி மனிதரைப் பற்றி புகழ்ந்து பேசுவது நோக்கமல்ல.

தொல்லியல் துறையில் பல பிரிவுகள் இருக்கின்றன , அதில்  நாணயவியல்லும் ஒரு  துறை, அந்தத் துறையின் இன்றைய நிலைமை பற்றி என்னுடைய மனதில் தோன்றியதை பதிவு செய்கிறேன். எனது கருத்துக்கு மாற்றுக் கருத்தும் இருக்கலாம். மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அவர்களின் கருத்தை கீழே பதிவிடவும்.

தொல்லியல் துறையில் பல பிரிவுகளில் உள்ளன, உதாரணத்துக்கு கல்வெட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு புதிய பதிவுகள் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் தனியார்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலரும் புதிய கண்டுபிடிப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அந்தந்த கல்வெட்டு உள்ள இடங்களில் சென்று அதை புகைப்படம் எடுத்து அல்லது படிவங்கள்  எடுத்து மேலும் ஆராய்ச்சி செய்யலாம் அதற்கு எந்த வகையான தடையும் இல்லை  அந்த கல்வெட்டில் யாரும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது. அதனால் புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த கண்டுபிடிப்புகளைப் பற்றி வெளியிட்ட ஆவணம் வரலாறு போன்ற புத்தகங்கள் வருடம் தோறும் வெளிவருகின்றன. இது அந்தத் துறையின் வளர்ச்சியை வெளிக்காட்டுகிறது. 

இப்பொழுது நாம் பேச வேண்டிய நாணயவியல் துறையைப் பற்றி பார்ப்போம் இந்திய தொல்லியல் துறையின் சட்டப்படி பழம் காசுகளை  தனியார்கள் சேகரித்து அவர்கள் சேகரிப்பில் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது. ( இன்றுவரை அந்த சட்டம் மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்) .
தென்னிந்தியக்காசுகளை( தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இடங்களில் கிடைக்கும் காசுகள்)இந்தியா முழுவதும் ஒரு குத்துமதிப்பாக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் சேகரிக்கிறார்கள். இந்த  சேகரிப்பார்கலில் 10லிருந்து 20 சதவிகிதம் நபர்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வகையான காசுகளை சேகரிக்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட ஆட்சி காலத்தில் வெளியிட்ட காசுகளை சேகரிப்பார்கள் உதாரணத்துக்கு சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர் , அல்லது நாயக்கர் மன்னர்கள்  காலகட்டத்தில் வெளியிட்ட காசுகளை தனித்தனியாக சேகரிப்பார்கள். 

1988 லிருந்து 2011 வரை நாணயவியல் துறையில் பல புதிய கண்டுபிடிப்பை பற்றி அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. ஐராவதம் மகாதேவன் ஆசியுடன்  ஆறுமுக சீதாராமன் அவர்கள், தினமணி  நாளிதழில் பல புதிய கண்டுபிடிப்பு பற்றி 200  கட்டுரைக்கு மேல் எழுதினார், பிறகு அது புத்தக வடிவிலும் வெளிக்கொண்டு வந்தார் அந்த காலகட்டத்தில் பெங்களூரை சேர்ந்த கணேஷ் & டாக்டர் கிரிஜாபதி சந்திரசேகர், சென்னை தொல்லியல் துறையில் தலைவராக இருந்த தலைவர் நாகசாமி அவர்கள் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம  மூர்த்தி இங்கிலாந்தில் வசித்த மைக்கேல் மச்சினர் அவர்கள் கேரளாவை சேர்ந்த        பினாசரசன் போன்றோ பலரும்  புத்தகங்கள் எழுதி வெளியிட்டார்கள்.

 தென்னிந்திய நாணயவியல் கழகம் தொடங்கி முப்பத்தி இரண்டு புத்தகங்கள் வெளியிட்டார்கள் அதில் 75 சதவீதம் புதிய கண்டுபிடிப்பாக இருந்தன சென்னை நாணயவியல் கழகம் 13 புத்தகத்தை வெளிக்கொண்டு வந்தார்கள் அதிலும் பல புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரைகள் இருந்தன. மேலே சொல்லப்பட்ட அனைத்தும் உதாரணமாக  தான் ,மேலும் பல செய்திகள்  / புத்தகங்கள் அந்த காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தன. 

2012 இல் இந்தியாவில் முதல் காசுகளை ஏலம் விடும் நிறுவனம் துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு இன்றுவரை  பதினைந்துக்கும் மேல் ஏல  நிறுவனங்கள்  தொடங்கப்படுகின்றன. ஏல நிறுவனத்தினால்  நாணயவியல்லுக்கு பல நன்மைகளும் பல தீமைகளும் ஏற்பட்டன.

அந்த நன்மை தீமைகளில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது  இதுவரை வெளிவராத காசுகளை  அவர்களது விலைப்பட்டியல் அட்டவணையில் (catalogue), ஒரு சிறிய விளக்கத்துடன் வெளியிட்டார்கள். அந்த செய்தி ஒரு சிறிய அளவு சேகரிப்பாளர் மட்டும் சென்றடைந்தது.  அந்த அட்டவணையில் உள்ள செய்திகள் நாணயவியல் புத்தகமாக வெளி வராததால் இந்த புதிய கண்டுபிடிப்புகள் பற்றி முக்கியத்துவம் வெளியில் தெரியாமல் போனது. அது நாணயவியல் துறைக்கு பெரும் இழப்பாகும்.
மேலும் சமூக வலைத்தளம் மூலம் பல காசுகள்  விற்கப்படுகிறது. அப்படி விற்கப்படும் காசுகளையும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளியில் தெரியாமல் தனியார் வசம் சென்றுவிடுகின்றன அவர்கள் யாரும் அந்த காசை பற்றி செய்தியை வெளியிடுவதில்லை புகைப்படத்தை பகிரவும் விரும்பவில்லை அதனால் அந்த காசுகளை பற்றி செய்திகள் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலை ஆகிவிடுகிறது. இப்படி இருக்கும் நிலைமையில் கூட சீதாராமன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் 20க்கும் மேற்பட்ட சிறிய புத்தகங்கள் பல புதிய கண்டுபிடிப்புகள் உடன் வெளியிட்டுள்ளார் . அந்தப் புத்தகம் யாவும் தமிழில் வெளிவந்ததால் அதற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

எனது சொந்த அனுபவத்தில் தமிழில் வெளியான மராட்டியர் காசுகளை பற்றி வந்த தமிழ் புத்தகத்தை தமிழ் தெரியாத மராட்டியர்கள் சேகரிப்பார்கள் நிறைய வாங்கினார்கள் அதுபோல் தமிழ் தெரிந்தும் தமிழ் தெரியாமலும் கேரளா காரர்கள் வேணாடு காசுகளை பற்றியும் கொங்கு சேரர்களைப் பற்றி வெளிவந்த புத்தகத்தை அதிகமாக வாங்கினார்கள் மற்ற புத்தகங்கள் அதிகமாக விற்கவில்லை இது ஒரு வருத்தமான செய்திதான்.

இந்தக் இந்த பதிவு மிகவும் நீளமாக வந்ததால் நாணயங்களை ஏலம் விடும் நிறுவனத்தின் மூலமும் தனியார் சேகரிப்பாளர்கள் இடம் உள்ள காசுகளை பற்றி வெளியில் தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்களால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும், தனியாக ஒரு பதிவு இடுகிறேன்.

நாணயவியல்  இன்றைய நிலைமை
சேகரிப்பார்கள் அதிகமாகி இருக்கிறார்கள் அதனால் விலையும் அதிகரிக்கிறது. மேலும் காசுகளை பற்றி விவரம் கிடைக்காததால் காசுகளை பற்றி ஆராய்ச்சி செய்வது அழிவை நோக்கி செல்கிறது. இது எனது சொந்த கருத்துதான்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.