ஞாயிறு, 16 ஜனவரி, 2022

சட்டம்

 நூறு வருடங்களுக்கு முன் நம் நாட்டில் உருவாக்கப்பட்ட அல்லது நம் நாட்டில் கிடைக்கும் எந்த ஒரு பொருளும் இந்தியாவை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று சட்டம் சொல்கிறது அப்படி செல்ல வேண்டுமென்றால் தொல்லியல் துறை அனுமதியுடன் அனுப்பலாம் என்று உள்ளது. நமது கலைப் பொருள்கள் எதுவும் வெளிநாடு செல்லாமல் தடுப்பது இந்த சட்டம் உறுதி செய்கிறது .


 இது ஒரு நல்ல சட்டம் தான் ஆனால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்ட நூறு வருடங்களுக்கு முன்னால் உள்ள பொருள்கள் இந்தியாவுக்குள்  வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது

( என்று சட்டம் இருக்கிறது.) இது எந்த வகையில் சரி என்று புரியவில்லை உதாரணத்துக்கு தபால் துறையின் மூலம் நூறு வருடங்களுக்கு முன்னால் உள்ள காசுகளை அனுப்பினாள் அது தபால்துறை (கஸ்டம்ஸ்)   சுங்கத்துறை பிடித்து வைத்துக்கொள்கிறது.. பிறகு அந்த பொருள் என்ன ஆகிறது என்று ஆராய்ந்து பார்த்தார் சுங்கத்துறையினர் அதை ஏலத்துக்கு விடுகிறார்கள் அதன் மதிப்பு அவர்களுக்கு தெரியாது எப்போது ஏலம் நடக்கிறது என்பது தெரியாத, என்ன விலைக்கு ஏலம் விடப்படுகிறது என்பதும் தெரியாது. ஆனால் அந்தப் பொருள் இந்தியாவுக்குள் வந்துவிடும்.


நூறு வருடங்கள் பழமையான பொருள் இந்தியாவுக்குள் வருவதை தடை செய்யும் இந்த சட்டத்தைப் பற்றி உங்கள் கருத்துகளை பகிரவும்.

வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களுக்கு சுங்கத்துறை  சுங்கவரி விதிக்கிறார்கள்.  அப்படி ஒரு வரியை நிர்ணயம் செய்து சட்டத்துக்குள்பட்ட அந்த நூறு வருடங்களுக்கு பழமையான பொருள்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாமா.

 சுங்கத் துறையினரால் பிடித்து வைத்துக் கொண்ட பொருட்களை தொல்லியல் துறைக்கு அதன் மதிப்பை நிர்ணயம் செய்ய அனுப்புகிறார்கள் அந்த மதிப்பை கொண்டு வரி விதிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக