திங்கள், 17 ஜனவரி, 2022

நாணயங்களின் விலை உயர்வுக்கு ஒரு முக்கியமான காரணம்.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் விலிருந்து நாணயங்கள் வெளியிடப்பட்ட சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது

இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டால் பெரும் சாம்ராஜ்யம் அமைத்து ஆட்சி செய்த அசோகர் முதல் இன்று வரை உள்ள ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்டுள்ள நாணயங்கள் எண்ணிக்கை மற்றும் வடிவங்களை கற்பனைக்கெட்டாத ஆகும். இதில் சக்கரவர்த்திகள் மன்னர்கள் குறுநில மன்னர்கள் ஜமீன்தார்கள் அனைவரும் அவரவர்கள் எல்லைக்குள் பயன்படுத்துவதற்காக நாணயங்களை வெளியிட்டுள்ளார்கள் .  

இந்த நாணயங்களை அனைத்தையும் சேகரிப்பது என்பது உலகிலுள்ள எந்த வசதி படைத்தவர் ஆளும் இயலாத ஒன்றாகும் .

நாணயங்கள் சேகரிப்பார்கள் தவிர மற்ற பொது மக்களுக்கு தெரியாத ஒரு செய்தி என்னவென்றால் நாணயம் சேகரிப்பாளர்கள் என்று சிறப்பு நாணயங்களை அரசாங்கத்தால் வெளியிடும் நடைமுறை உள்ளது இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்

சென்னையில் மதராஸ் நாணயவியல் சங்கம் பல நாணய கண்காட்சிகளை நடத்தியுள்ளன. கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கு என்று நாணயம் சேகரிப்பாளர்கள் தங்கள் நாணயத்தை சேகரிப்பை போட்டி போட்டு கொண்டு காட்சி படுத்துவார்கள் , இதில் ஆச்சரியம் என்னவென்றால் தான் சேகரிப்பை காட்சிப்படுத்த அந்த சங்கத்திற்கு அவர்கள் பணம் கட்ட வேண்டும் பணம் கட்ட இல்லாதவர்கள் தன் சேகரிப்பை காட்சி படுத்த இயலாது, இவ்வகை நிலையிலும் தன் சேகரிப்பை காட்சிப்படுத்த எடுத்து வந்து உரிய இடம் இல்லாமல் திரும்பி எடுத்துக் சென்ற நிகழ்வும் உண்டு .இன்றைய நிலையில் முற்றிலும் மாறி வியாபார நோக்கத்துடன் மட்டுமே  நாணயவியல்  கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு செய்தி நாணயம் விற்பனை செய்பவர்களுக்கு  வசதி தான் என்றாலும் சேகரிப்பாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. சில இடங்களில் நடத்தப்படும் கண்காட்சியில் சேகரிப்பாளர்கள் காட்சிப்படுத்த சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன அதுவும் ஓரமாக சிறிய அளவிலும் உள்ளது.

 இந்தியாவில் 2012 க்கு பிறகு நாணயம் ஏலம் விடும் நடைமுறை அறிமுகமாகி ஏலம் விடும் நிறுவனங்கள் அதிகமாக தோன்ற ஆரம்பித்தன நிறுவனங்கள் தங்கள் சொந்த சேகரிப்புகளை பெரும்பாலும் எழுத்தில் கொண்டு வர மாட்டார்கள் மாறாக நாணயம் சேகரிப்பாளர்கள் இருந்து நான் பெற்று ஏலத்தில் விற்பனை செய்வார்கள் இம்முறையில் ஏலம் விடும் நிறுவனங்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் உண்டு .சேகரிப்பாளர்கள் இடமிருந்து நாணயங்களைப் பெற்று அவர்களை தரம்பிரித்து புகைப்படம் எடுத்து விலை விவரங்களுடன் அட்டவணைப்படுத்தி ஒரு புத்தகம் தயாரிப்பார்கள் இதற்கு அதிகம் செலவாகும் குறைந்தபட்சம்  ஆயிரம் புத்தகங்கள் ஆகுது தயாரித்து சேகரிப்பாளர்கள்  அனுப்பவேண்டும் . அப்படிப் புத்தகங்கள் பெறுவோர் அனைவரும் நாணயங்கள் வாங்குவார்கள் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. பெரும் முதலீடு செய்து எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறாமல் மன சங்கடத்துக்கு ஆளாகி நஷ்டப்பட்ட வர்களும் உண்டு.

 கொரோனா காலத்தில் முன்புவரை புத்தகங்கள் அனுப்பும் முறை நடைமுறையில் இருந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்  நாணயங்களை ஏலம் விடும் நிறுவனங்கள் சொந்த வலைத்தளங்களை ஏற்படுத்தி அதில் அட்டவணைப்படுத்தி வியாபாரத்தை தொடங்கினார்கள் . வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு மட்டுமே நாணயங்களை  பற்றி செய்திகள் சென்றடைந்தால் சேகரிப்பாளர் எண்ணிக்கை மிகவும் சுருங்கிப்போய் நாணயவியல் ஆராய்ச்சிக்கு பலமே பலவீனமாக போய்விட்டது.

 சமீப காலத்தில்  ஏலம் விடப்படும் நாணயங்களை பற்றி முகநூல் ட்விட்டர் தலங்களில் சிறிய சிறிய செய்திகளாக எழுதி வருகிறார்கள். இதுவும்  அவ்வளவாக வெற்றி பெறவில்லை. 

நான் மேலே குறிப்பிட்டது போல்  இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நாணயங்கள் குறித்து எந்த ஒரு தனிநபர் ஆலும்அடையாளம் காட்ட முடியாது அதனால் ஏலம் நடத்தும் நிறுவனங்களுக்கு நாணயங்களை வகைப்படுத்த அதன் தரம் மற்றும் சிறப்புகளை அறிந்து உள்ள நபர்களை ஒன்றிணைத்து ஒரு குழு அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது இந்த  செலவுகள் மற்றும் ஏலம் நடத்தும் நாளில் ஏற்படும் நடைமுறை செலவுகளும் அனைத்துமே ஏலம் நடத்தும் நிறுவனங்கள் செய்யவேண்டியுள்ளது , இதனால் அட்டவணை செய்யும் காசுகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை அந்த நாணயத்தின்மதிப்புடன் கூட்டினால் தான் வியாபாரம் சற்று லாபம் அடையும். இந்த முறையை தான் எல்லா  ஏலம் விடும் நிறுவனங்களும் பின்பற்றுகிறார்கள்.

இதில் இன்னொரு சங்கடம் என்னவென்றால் வட நாட்டினருக்கு குறிப்பாக மும்பை டெல்லி கொல்கத்தா அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ள  ஏலநிறுவனத்திற்கு  தமிழ்நாட்டில் கிடைக்கும் நாணயங்களின் விலையை பற்றி அதிகம் தெரிவதில்லை அதனால் குறைந்தது ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதன் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். மேலும் சில நிறுவனங்கள் நாணயங்களை விற்பனை செய்பவர்கள் சொல்லும் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அது எப்பொழுதுமே சற்று அதிகமாக தான் உள்ளது. இவ்வகை நடைமுறைகளால் நாணயங்களின் விலை உயர்வதோடு நாணயம் சேகரிப்பாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதுவும் ஒரு வருத்தமான செய்திதான். 

நான் முன்பு சொன்னது போல் எந்த ஒரு தனிநபரும் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து நாணயங்களையும் வகைப்படுத்தவும் விபரங்களை கூறுவோம் இயலாது இதனால் நாணய ஏல  அட்டவணையில் விபரங்கள் எழுதும்போது பல தவறுகள் நிகழ்ந்து விடுகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறி இந்த பதிவை முடிக்க விரும்புகிறேன்.

 சில மாதங்களுக்கு முன் நடத்திய ஏலத்தில் சோழர்கள் காலத்தில் தங்க காசு ஒன்று பட்டியல் இடப்பட்டு இருந்தது அதன் விவரங்களாக முன்பக்கத்தில் புலி அமர்ந்த நிலையில் இரண்டு மீன்கள் ஒரு குடையின் கீழ்  இருப்பது போல உள்ளது அது சோழர் காலத்து நாணயம் என்று முடிவு எடுத்தார்கள் ஆனால் பின் பக்கத்தில் இருக்கும் எழுத்தை தேவநாகரி என்று தவறாகப் படித்து உள்ளார்கள் ஆனால் அது தேவநாகரி எழுத்தில் இல்லை என்றும் அது சோழர் காலத்து தமிழ்  எண்கள், சோழர் ஆட்சி செய்த வருடத்தை குறிப்பிட்டு வெளியிட்ட நாணயம் என்றும் தஞ்சாவூரில் வசிக்கும் நாணயவியல்  ஆராய்ச்சியாளர் திரு சீதாராமன் அவர்களால் கண்டறியப்பட்டு  இவ்விவரங்கள் என்னிடம் கூறினார்.

இதற்கு சான்றாக தமிழில் ஆட்சி ஆண்டுகளைக் குறிக்கும் நாணயங்களை தமிழ் எண்கள் உடன் தவலேஸ்வரம் புதையல்( Dhavleswaram)கிடைத்துள்ளது. இதைப்பற்றி சென்னை அருங்காட்சியகம் ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளது.

 இந்த தவறை எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட அட்டவணையில் இன்றுவரை சரி செய்யப்படவில்லை இவ்வகை தவறுகள்  உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் இது தவறு சரித்திரத்தை தவறாக குறிப்பிடும் நிலையில் உள்ளதால் புதிதாக கிடைக்கும் நாணயங்களை அந்தப்பகுதியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள்யிடம் கருத்தை கேட்டு வெளியிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக